← எல்லா உதவித் தலைப்புகளும்

தொடங்குதல்

உங்கள் கணக்கை உருவாக்குவது

பதிவு விசார்டு. உங்கள் BizGo கணக்கையும் முதல் வணிகப் பக்கத்தையும் ஒரே ஓட்டத்தில் உருவாக்குகிறது — உங்கள் விவரங்கள், உங்கள் வணிகம், ஒரு திட்டம், கடைசியாக பக்கம் நேரலைக்குப் போகும் முன் ஒரு பார்வை.

Read in English

படிகள்

  1. Your Name, Mobile Number ஆகியவற்றை நிரப்புங்கள். Terms & Conditions மற்றும் Privacy Policy-க்கு ஒப்புக்கொள்ளும் பெட்டியில் டிக் செய்து, Send OTP அழுத்துங்கள்.

  2. SMS-ல் வரும் குறியீட்டைத் தட்டச்சு செய்து Verify OTP அழுத்துங்கள். அந்த எண்ணுக்கு ஏற்கனவே BizGo கணக்கு இருந்தால், விசார்டு அதைச் சொல்லிவிட்டு உங்களை உள்நுழைவுத் திரைக்குக் கொண்டு போகும் — நீங்கள் தட்டச்சு செய்தது எதுவும் போகாது.

  3. வணிகத்துக்குப் பெயர் கொடுத்து, அதன் லிங்கைத் தேர்ந்தெடுங்கள். bizgo.in/ என்பதற்குப் பிறகு வருவதுதான் உங்கள் page URL; நீங்கள் தட்டச்சு செய்யும்போதே அது காலியாக இருக்கிறதா என்று சரிபார்க்கும். லோகோ கட்டாயமில்லை; WhatsApp எண்தான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும் வழி. Continue அழுத்துங்கள்.

    உங்கள் கணக்கை உருவாக்குவது — 3
  4. ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அட்டையின் பெயரே பொத்தானிலும் வரும் — Continue with Basic, Continue with Premium என்று. Free-ம் ஒரு தேர்வுதான்; அதற்குக் கார்டு எதுவும் கேட்காது. எந்தத் திட்டத்தில் என்ன அடங்கும் என்பது pricing பக்கத்தில் இருக்கிறது.

  5. கடைசிப் படியில் உங்கள் பக்கம் ஒரு பிரவுசர் சட்டத்துக்குள், அதன் உண்மையான முகவரியில் தெரியும். Free திட்டத்தில் அந்தப் பொத்தான் பக்கத்தை உடனே வெளியிடும். கட்டணத் திட்டம் என்றால் அது உங்களைப் பணம் செலுத்தும் படிக்குக் கொண்டு போகும்; அது முடிந்ததும் பக்கம் நேரலைக்கு வரும்.

கேள்விகள்

முடியாது. பக்கம் உருவாகும்போதே page URL நிலையாகிவிடும் — எடிட்டரில் அது மங்கலாகக் காட்டப்பட்டு, அருகிலேயே அந்தக் குறிப்பும் இருக்கும். பக்கத்தில் மற்ற எல்லாவற்றையும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். வேறு லிங்க் வேண்டும் என்றால் இரண்டாவது பக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

வேண்டாம். திட்டம் தேர்ந்தெடுக்கும் படியில் free திட்டமும் ஒரு தேர்வுதான்; அதற்குக் கார்டு தேவையில்லை. பிறகு அந்தப் பக்கத்தை Subscriptions-ல் இருந்து கட்டணத் திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.

அது மாதிரி உள்ளடக்கம்; வடிவமைப்புக்கு ஏதாவது காட்ட வேண்டுமே, அதற்காக. சட்டத்துக்குக் கீழே திரையே அதைச் சொல்கிறது. பக்கம் நேரலைக்கு வந்த பிறகு தீம், எழுத்து, ஒவ்வொரு விவரம் என எல்லாவற்றையும் page editor-ல் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.

அப்படியானால் நீங்கள் முன்பே பதிவு செய்திருக்கிறீர்கள். அந்தச் செய்தியில் உள்ள Sign in அழுத்துங்கள். இருக்கும் கணக்கிலேயே இன்னொரு வணிகப் பக்கத்தைச் சேர்க்க வேண்டும் என்றால், மீண்டும் பதிவு செய்யாமல் Pages திரையில் உள்ள Create New Page-ஐப் பயன்படுத்துங்கள்.

பக்கம் நேரலையில் இருப்பதை விசார்டு உறுதி செய்து, அதன் முகவரியைக் காட்டி, Go to Dashboard, View My Page ஆகிய இரண்டையும் தரும். அந்த நிமிடத்திலிருந்தே பக்கம் பொதுவில் இருக்கும்.

தொடர்புடையவை

Three Products, One Dashboard

Your page, your plan. The Review Engine and AI Chat come with Pro and Premium — manage every page from one dashboard.

Digital Business Page

Your whole business on one shareable link — logo, services, timings, location and contact. Live in minutes.

Learn more →

Review Engine

Runs a WhatsApp follow-up campaign for every customer you serve, until they leave you a Google review.

Learn more →

AI Chat

Answers your visitors 24/7, captures their name and phone, and drops every lead into your CRM.

Learn more →
WhatsApp