← எல்லா உதவித் தலைப்புகளும்

Review Engine

Review campaign தொடங்குவது

ஒரு வேலையை இப்போதுதான் முடித்திருக்கிறீர்கள் என்றால், அந்த வாடிக்கையாளரை இங்கே சேர்த்து அவருக்கான review campaign-ஐத் தொடங்கலாம். ஒரு பக்கத்தின் engine-ஐத் திறந்தால் முதலில் வரும் திரை இதுதான்.

Read in English

படிகள்

  1. இடது பக்கம் இருக்கும் Quick add-ஐ நிரப்புங்கள் — வாடிக்கையாளரின் பெயர், அவருடைய 10 இலக்க மொபைல் எண். பிறகு Start review campaign-ஐ அழுத்துங்கள்.

    Review campaign தொடங்குவது — 1
  2. பொத்தானுக்குக் கீழே இருக்கும் வரி, இதற்கு ஒரு review campaign செலவாகும் என்றும், இந்தப் பக்கத்தில் இன்னும் எத்தனை மீதி இருக்கு என்றும் சொல்லும். ஒரு campaign என்பது ஒரு credit — அடுத்து என்ன நடந்தாலும் சரி — அதுவும் இந்த நேரத்திலேயே பிடிக்கும்.

  3. வலது பக்கம் இருக்கும் Message preview-ல், check-in, review request, reminder மூன்றும் அப்படியே எப்படி இருக்கும் என்று படிக்கலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் சேமித்த வணிகப் பெயரையும் review link-ஐயும் வைத்துத்தான் அது எழுதுகிறது.

  4. பச்சை நிறத்தில் Enrolled என்று ஒரு குறிப்பு வரும். மூன்று messages-ல் ஒவ்வொன்றும் எப்போது தயாராகும் என்று அதில் இருக்கும்; Go to Send queue என்ற வழியும் இருக்கும். அந்த queue-ல்தான் நீங்கள் WhatsApp-ஐத் திறந்து, நீங்களே Send-ஐ அழுத்துவீர்கள்.

  5. கீழே இருக்கும் Recent review campaigns-ல், இந்தப் பக்கத்தில் சேர்த்த எல்லாரும் இருப்பார்கள். Sequence நெடுவரிசை மூன்று படிகளையும், ஒவ்வொன்றும் எந்த நிலையில் இருக்கு என்பதையும் காட்டும். நடந்துகொண்டிருக்கும் ஒரு வரியில் Stop-ஐ அழுத்தினால் மீதி இருப்பது ரத்தாகும்.

கேள்விகள்

ஒரு review campaign. அந்த campaign-ல் மூன்று messages வரை அடங்கும் — ஒரு check-in, ஒரு review request, ஒரு reminder. மூன்றுமே அதே ஒரு credit-ல் இருந்துதான். Start review campaign-ஐ அழுத்தும்போது ஒரே ஒரு முறை மட்டும் பிடிக்கும்.

இல்லை. campaign தொடங்கினால் மூன்று messages எழுதி முடித்து, ஒவ்வொன்றும் எப்போது தயாராக வேண்டும் என்று கணக்கிட்டு வைக்கும். பிறகு ஒவ்வொன்றும் Send queue-ல் காத்திருக்கும். நீங்கள் WhatsApp-ஐத் திறந்து உங்கள் சொந்த போனிலிருந்து அனுப்பும் வரை அது அப்படியேதான் இருக்கும்.

அதன் messages ஒன்றுகூட இன்னும் போகவில்லை என்றால் ஆம் — credit இந்தப் பக்கத்தின் balance-க்குத் திரும்பும், உறுதிப்படுத்தும் செய்தியிலும் அது தெரியும். முதல் message போய்விட்டால், அந்த credit செலவாகிவிட்டதுதான்.

திரையின் மேலே இருக்கும் balance பகுதியில் Buy campaigns இருக்கும். நீங்கள் வாங்கும் pack, திட்டத்தில் ஏற்கனவே இருப்பதற்கு மேலே சேரும். Balance பக்கத்துக்குச் சொந்தமானது; அதனால் உங்கள் இன்னொரு பக்கத்தில் கிடக்கும் credits இந்தப் பக்கத்துக்கு உதவாது.

review request உங்கள் வாடிக்கையாளரை விமர்சனம் எழுத ஓர் இடத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். இந்தப் பக்கத்தின் Settings-ஐத் திறந்து, உங்கள் Google review link-ஐ Google review link என்ற கட்டத்தில் ஒட்டுங்கள்.

தொடர்புடையவை

Three Products, One Dashboard

Your page, your plan. The Review Engine and AI Chat come with Pro and Premium — manage every page from one dashboard.

Digital Business Page

Your whole business on one shareable link — logo, services, timings, location and contact. Live in minutes.

Learn more →

Review Engine

Runs a WhatsApp follow-up campaign for every customer you serve, until they leave you a Google review.

Learn more →

AI Chat

Answers your visitors 24/7, captures their name and phone, and drops every lead into your CRM.

Learn more →
WhatsApp