← எல்லா உதவித் தலைப்புகளும்

Review Engine

இந்தப் பக்கத்தின் contacts

ஒரு வணிகப் பக்கத்துக்கான தொடர்புப் பட்டியல் இது. இதில் இருக்கும் யாரையும் ஒரு review campaign-ல் சேர்க்கலாம், அல்லது ஒரு reactivation batch-ல் அள்ளிப் போடலாம். இதில் எதுவும் உங்கள் மற்ற பக்கங்களுக்குப் போகாது.

Read in English

படிகள்

  1. Add Contact-ஐ அழுத்தினால் இரண்டு பகுதிகள் கொண்ட ஒரு சாளரம் திறக்கும். மேல் பகுதியில் ஒருவரை மட்டும் சேர்க்கலாம் — Name, Phone, வேண்டுமானால் Tags. கீழ்ப் பகுதி CSV-ஐ ஏற்கும்; ஒரு கோப்பைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது வரிகளை நேரடியாக ஒட்டலாம்.

    இந்தப் பக்கத்தின் contacts — 1
  2. CSV-ல் Name, Phone, Tags என்ற நெடுவரிசைகள் இருக்க வேண்டும். தலைப்பு வரி இருந்தால் அது தானாகவே கண்டுபிடிக்கும். இறக்குமதி செய்வதற்கு முன் முதல் சில வரிகளை முன்னோட்டமாகப் பார்க்கலாம்; முடிந்த பிறகு எந்த வரி சேர்ந்தது, எது புதுப்பித்தது, எது மறுத்தது என்று வரி வரியாக ஒரு அறிக்கை வரும்.

  3. அட்டவணைக்கு மேலே பெயர், எண், tag வைத்துத் தேடலாம்; Filter by tag வைத்துக் குறுக்கலாம். இப்போது தேடலிலும் filter-லும் என்ன தெரிகிறதோ, அதைத்தான் Export CSV இறக்கித் தரும்.

  4. வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து Start review campaigns-ஐ அழுத்துங்கள். யாரையும் சேர்ப்பதற்கு முன் ஒரு முன்னோட்டம் வரும் — யார் தகுதியானவர், யார் விடுபடுகிறார், ஏன், மொத்தம் எத்தனை campaigns செலவாகும் என்று.

    இந்தப் பக்கத்தின் contacts — 4
  5. ஒரு வரியில் இருக்கும் பென்சில் குறியை அழுத்தினால் Edit Contact திறக்கும். அதில் Opted out of messages என்ற switch இருக்கும். அதற்குக் கீழே, தனியாகவே, They asked me to stop இருக்கும்.

கேள்விகள்

அவருடைய வரியில் They asked me to stop-ஐப் பயன்படுத்துங்கள். அவருக்கு நடந்துகொண்டிருக்கும் campaign முடிந்துவிடும், queue-ல் இருக்கும் messages ரத்தாகும், அந்த எண் BizGo முழுவதிலும் அமைதியாகிவிடும் — இந்தப் பக்கத்தில் மட்டும் அல்ல, உங்கள் கணக்கில் மட்டும் அல்ல. இந்த platform-ல் இருக்கும் மற்ற எல்லா வணிகங்களும் அவருக்கு message போடுவதை நிறுத்திவிடும். இது நிரந்தரம்; இந்தத் திரையிலிருந்து இதைத் திரும்பப் பெற முடியாது. அது வேண்டுமென்றேதான் — 'எனக்கு இனி message வேண்டாம்' என்பது ஒரு மனிதருக்குக் கொடுக்கும் வாக்கு, ஒரு வணிகத்துக்கு அல்ல.

ஒருவரை விட்டுவிடலாம் என்று நீங்கள் எடுத்த முடிவை அது பதிவு செய்கிறது; வேண்டுமானால் அதைத் திரும்ப அணைத்துவிடலாம். They asked me to stop என்பது வாடிக்கையாளரே சொன்ன கட்டளையைப் பதிவு செய்கிறது — அது இதைவிட மிக வலிமையானது. அதை நீக்க வேண்டும் என்றால் முதலில் உறுதிப்படுத்தச் சொல்லும்.

இல்லை. ஒரு தொடர்பு ஒரே ஒரு பக்கத்துக்குச் சொந்தம். ஒரே மொபைல் எண் உங்கள் இரண்டு பக்கங்களிலும், தனித்தனி tags-உடன், இரண்டு தனித் தொடர்புகளாக இருக்கலாம். பக்கத்தை மாற்றினால் பட்டியல் முழுவதும் மாறும் — அந்தப் பக்கத்தின் credits, அமைப்புகள் எல்லாமும் சேர்ந்தே.

இறக்குமதி செய்யும்போது, இந்தப் பக்கத்துக்குள் மொபைல் எண்ணை வைத்துத்தான் பொருத்திப் பார்க்கும். அதனால் இரண்டாவது வரி புதிதாக ஒன்றை உருவாக்காமல் முதல் வரியைப் புதுப்பிக்கும். எந்த வரிகள் சேர்ந்தன, எவை புதுப்பித்தன என்று முடிவு அட்டவணை சொல்லும்.

வேண்டாம் என்று சொல்லிவிட்ட தொடர்பு மங்கலாகத் தெரியும்; அவரைத் தேர்ந்தெடுக்க முடியாது — இந்தத் திரையிலும் சரி, Reactivation திரையிலும் சரி. இங்கே நீங்கள் என்ன செய்தாலும் அவரை மறுபடி ஒரு campaign-ல் கொண்டுவர முடியாது.

தொடர்புடையவை

Three Products, One Dashboard

Your page, your plan. The Review Engine and AI Chat come with Pro and Premium — manage every page from one dashboard.

Digital Business Page

Your whole business on one shareable link — logo, services, timings, location and contact. Live in minutes.

Learn more →

Review Engine

Runs a WhatsApp follow-up campaign for every customer you serve, until they leave you a Google review.

Learn more →

AI Chat

Answers your visitors 24/7, captures their name and phone, and drops every lead into your CRM.

Learn more →
WhatsApp