← எல்லா உதவித் தலைப்புகளும்

Review Engine

Google Reviews — இணைப்பும் பதில்களும்

ஒரு வணிகப் பக்கத்தை ஒரு Google Business Profile இடத்துடன் இணைக்கும். பிறகு அந்த விமர்சனங்களை இங்கே காட்டி, அவற்றுக்குப் பதில்களையும் எழுதித் தரும். இந்த இணைப்பு, நீங்கள் இப்போது இருக்கும் பக்கத்துக்குச் சொந்தமானது.

Read in English

படிகள்

  1. Connect Google-ஐ அழுத்தி, உங்கள் வணிகத்தை நிர்வகிக்கும் Google கணக்கில் உள்நுழையுங்கள். Google பக்கம் முடிந்ததும் நீங்கள் இதே திரைக்குத் திரும்பி வந்துவிடுவீர்கள்.

    Google Reviews — இணைப்பும் பதில்களும் — 1
  2. அந்தக் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் இருந்தால், Choose your Business Profile location தெரியும். இந்தப் பக்கம் எந்த இடத்துக்கானதோ அதைத் தேர்ந்தெடுங்கள் — நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தின் விமர்சனங்கள் மட்டுமே இங்கே வரும், அவற்றை மட்டுமே நிர்வகிக்க முடியும்.

  3. இணைந்ததும், திரையின் மேலே அந்த இடத்தின் பெயர், கடைசியாக எப்போது sync ஆனது என்பது, பிறகு Sync now, Disconnect இரண்டும் தெரியும்.

  4. புதிய விமர்சனத்துக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை Auto-reply settings முடிவு செய்கிறது. Auto-draft replies to new reviews-ஐ ஆன் செய்து, பிறகு ஒரு Posting mode-ஐத் தேர்ந்தெடுங்கள். Review before posting என்றால், ஒவ்வொரு வரைவும் உங்களுக்காக இங்கேயே காத்திருக்கும். Post automatically என்றால், நீங்கள் வைத்த மதிப்பீட்டுக்கு மேல் உள்ள விமர்சனங்களுக்கு, நீங்கள் வைத்த தாமதத்துக்குப் பிறகு அது வெளியாகும்.

  5. Reply voice-ல் பதிலின் தொனியையும், வேண்டுமானால் ஒரு கையொப்பத்தையும் வைக்கலாம்; கீழே ஒரு மாதிரியும் தெரியும். நீங்கள் விரும்பியபடி இருக்கிறது என்றால் Save auto-reply settings-ஐ அழுத்துங்கள்.

  6. Reviews பட்டியலில், எழுதி வைத்த ஒவ்வொரு பதிலுக்கும் Approve, Edit, Regenerate, Skip இருக்கும். நல்ல மதிப்பீடு உள்ள வரைவுகளை ஒரே சேர அனுமதிக்க Bulk approve இருக்கிறது.

கேள்விகள்

இல்லை. ஒரு பக்கம் ஒரு இடத்துடன் இணையும்; அதற்குத் தனி உள்நுழைவு, தனி Disconnect. இரண்டாவது பக்கத்தை இணைப்பது தனி வேலை; அதன் auto-reply அமைப்புகளும் தனிதான்.

நீங்கள் Post automatically-ஐத் தேர்ந்தெடுத்தால் மட்டும்; அதுவும் நீங்கள் வைத்த மதிப்பீட்டுக்கு மேல் உள்ள விமர்சனங்களுக்கு மட்டும். பரிந்துரைக்கப்படுவது Review before posting-தான்; நீங்கள் Approve-ஐ அழுத்தும் வரை இந்தத் திரையை விட்டு எதுவும் வெளியே போகாது. தானியங்கி முறையில் இருந்தாலும், நீங்கள் வைத்த எல்லைக்குச் சமமான அல்லது அதற்குக் கீழே உள்ள எதுவும் உங்களுக்காகக் காத்திருக்கும்.

Settings-ல் இருக்கும் அந்த link, விமர்சனம் எழுத உங்கள் வாடிக்கையாளர் போக வேண்டிய இடம். இந்த இணைப்போ, திரும்ப வரும் விமர்சனங்களைப் படித்து, அவற்றுக்குப் பதில் சொல்ல உதவுகிறது. ஒன்று இல்லாமல் இன்னொன்று வேலை செய்யும்.

sync ஆன பிறகுதான் விமர்சனங்கள் வரும். Sync now-ஐ அழுத்துங்கள்; கொஞ்சம் காத்திருக்கச் சொன்னால், சற்று முன்புதான் sync ஆகியிருக்கிறது என்று அர்த்தம். இதுவரை ஒரு விமர்சனமும் வராத இடத்தில், முதல் விமர்சனம் வரும் வரை ஒன்றும் தெரியாது.

Google கொடுத்த அனுமதி காலாவதியாகிவிட்டது, அல்லது திரும்பப் பெற்றுவிட்டார்கள். Reconnect Google-ஐ அழுத்தி மறுபடி உள்நுழையுங்கள். Disconnect என்றால், அந்த இணைப்பே இந்தப் பக்கத்திலிருந்து முழுவதுமாக நீங்கிவிடும்.

தொடர்புடையவை

Three Products, One Dashboard

Your page, your plan. The Review Engine and AI Chat come with Pro and Premium — manage every page from one dashboard.

Digital Business Page

Your whole business on one shareable link — logo, services, timings, location and contact. Live in minutes.

Learn more →

Review Engine

Runs a WhatsApp follow-up campaign for every customer you serve, until they leave you a Google review.

Learn more →

AI Chat

Answers your visitors 24/7, captures their name and phone, and drops every lead into your CRM.

Learn more →
WhatsApp