AI Chat
Conversations — உரையாடல்கள்
ஒரு பக்கத்தில் assistant-உடன் பார்வையாளர்கள் நடத்திய ஒவ்வொரு chat-ம், வேண்டுமானால் அதன் முழு எழுத்தும் இங்கே. இது படிப்பதற்கான பதிவு; இங்கிருந்து பதில் சொல்வதற்கானது அல்ல.
படிகள்
-
புதியது முதலில் என்ற வரிசையில் conversations அட்டவணையில் இருக்கும்: எப்போது தொடங்கியது, கடைசியாக எப்போது நடந்தது, எத்தனை messages ஓடியது, assistant பிடித்த தொடர்பு விவரம், பார்வையாளர் எந்தப் பக்கத்தில் இருந்தார் என்று. இடது ஓரத்தில் பச்சைக் கோடு இருக்கும் வரி ஒரு lead-ஐக் கொடுத்தது என்று அர்த்தம்.
-
அட்டவணைக்கு மேலே இருக்கும் கட்டுப்பாடுகள் பட்டியலை server-லேயே குறுக்கும்: பேசியதில் தேடல், From, To தேதிகள், Min. messages, பிறகு Any, Has lead, No lead. filter-ல் என்ன தெரிகிறதோ அதைச் சரியாக Export CSV இறக்கித் தரும்; Clear filters முழுப் பட்டியலையும் திரும்பக் கொண்டுவரும்.
-
ஒரு வரியின் கடைசியில் இருக்கும் Read-ஐ அழுத்தினால் அந்த உரையாடலே திறக்கும் — பிடித்த தொடர்பு விவரம், எப்போது தொடங்கியது, கடைசியாக எப்போது நடந்தது, பார்வையாளரின் IP முகவரி, அவர் இருந்த பக்கம், பிறகு ஒவ்வொரு message-ம் வரிசையாக. assistant சொன்னவை, நீங்கள் அதற்கு வைத்த பெயருக்குக் கீழே இருக்கும்.
-
இரண்டு திரைகளிலும் நேரம் Asia/Kolkata (IST). பட்டியலை உங்கள் browser அல்ல, server-தான் பக்கம் பக்கமாகப் பிரிக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான conversations இருக்கும் பக்கமும், கைவிரல் எண்ணிக்கை conversations இருக்கும் பக்கமும் ஒரே வேகத்தில் திறக்கும்.
-
உரையாடலின் எழுத்து என்றென்றும் இருக்காது. ஒரு chat-ன் எழுத்தை BizGo குறிப்பிட்ட காலம் வைத்திருந்து, பிறகு நிரந்தரமாக அழித்துவிடும். அந்தக் காலம் என்ன என்பது bizgo.in/privacy-policy-ல் உள்ள Privacy Policy-ன் AI Chat பகுதியில் இருக்கிறது. அந்த chat பிடித்த பெயர், எண், மின்னஞ்சல் — அவை உங்கள் வணிகப் பதிவு; அவை அழியாமல் Leads திரையிலேயே இருக்கும். பேசிய வார்த்தைகளும் உங்களிடம் வேண்டும் என்றால் CSV-ஐ இறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.