AI Chat
சேகரித்த leads
இந்தப் பக்கத்தில் நடந்த உரையாடல்களில் இருந்து assistant பிடித்த ஒவ்வொரு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் — அவை உங்கள் தொடர்புப் பட்டியலுக்குப் போய்ச் சேர்ந்தனவா என்பதோடு சேர்த்து. AI Chat-ஐ வாங்குவதே இந்தப் பட்டியலுக்குத்தான்.
படிகள்
-
மேலே இருக்கும் கட்டங்கள், இந்தப் பக்கம் எவ்வளவு பிடித்திருக்கிறது, அவை எங்கே போய்ச் சேர்ந்தன என்பதைச் சொல்லும்: Leads captured, In CRM, Email only, Phone needs checking.
-
பத்து இலக்க இந்திய மொபைல் எண்ணாகப் படிக்கக்கூடிய lead, இந்தப் பக்கத்தின் contacts-ல் தானாகவே சேர்ந்துவிடும்; ai-chat என்று tag-ம் விழும். Review Engine பயன்படுத்தும் அதே பக்க அளவிலான தொடர்புப் பட்டியல்தான் அது. அதனால் அந்த நபரை நேராகவே ஒரு review campaign-ல் அல்லது ஒரு reactivation batch-ல் சேர்க்கலாம்.
-
ஒவ்வொரு lead-க்கும் என்ன ஆனது என்று CRM status நெடுவரிசை சொல்லும். ஏதாவது ஒன்று போய்ச் சேராமல் போனால், அட்டவணைக்கு மேலே இருக்கும் பகுதி ஒவ்வொரு நிலையையும் விளக்கமாகச் சொல்லும். அதற்குக் கீழே இருக்கும் chips அட்டவணையை வடிகட்டும் — அழுத்திப் பார்க்க வேண்டியது Not in CRM.
-
Phone needs checking என்று குறித்த வரியில், பார்வையாளர் என்ன தட்டச்சு செய்தாரோ அது அப்படியே தெரியும். அதற்குக் கீழே இருக்கும் Edit number & promote-ஐ அழுத்தி, எண்ணைத் திருத்தி, Save & promote-ஐ அழுத்துங்கள். அதே விதிப்படி மறுபடி சரிபார்க்கும்; சரி என்றால் உங்கள் contacts-ல் சேர்ந்துவிடும்.
-
Export CSV முழுப் பட்டியலையும் இறக்கித் தரும்; ஒரு chip ஆன் ஆக இருந்தால் வடிகட்டியதை மட்டும் தரும். ஒரு வரியின் கடைசியில் இருக்கும் பேச்சுக்குமிழ் பொத்தான், அந்த lead வந்த உரையாடலைத் திறக்கும்.